கடலூரில் பிறந்தநாள் விழா நடந்த மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்து கத்தியக்காட்டி மிரட்டிய ரவுடிகள்

0 434

கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் அருகே பிறந்தநாள் விழா நடந்த திருமண மண்டபம் ஒன்றில் திடீர் என வீச்சு அருவாளுடன் புகுந்த கஞ்சா போதை இளைஞர்கள்அங்கு பாடலுக்கு கத்தியோடுஆட்டம் போட்டதோடு, அங்கு இருந்தவர்களை மிரட்டியும், நாற்காலி உள்ளிட்டவற்றை உடைத்தும் சேதப்படுத்தினர்.

பின்னர் திருவந்திபுரம் பகுதியில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் கத்தியை சுழற்றியபடியே சென்ற நிலையில், அவ்வழியாக சென்ற பிரகாஷ் என்பவரின் மீது கத்தி பட்டு அவரது வாய், மூக்கு பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

அட்டகாசத்தில் ஈடுபட்ட 3 பேரும் பில்லாலி தொட்டியை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்த நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments