நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம்... இளைஞரை பெண்ணின் சகோதரர்கள் வெட்டிப் படுகொலை
சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். பைக் மெக்கானிக்கான கார்த்திக் பாண்டியும் சூப்பர் மார்கெட் ஊழியரான நந்தினியும் காதல் திருமணம் செய்துள்ளனர்.
நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் ஆகியோருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று இரவு கடையை மூடிவிட்டு, நந்தினி வேலை செய்த சூப்பர் மார்க்கெட் எதிரே வந்து நின்று அவருக்காகக் காத்திருந்த கார்த்திக் பாண்டியை பாலமுருகன், தனபாலன், அவரது நண்பர் சிவா ஆகியோர் இணைந்து வெட்டியுள்ளனர்.
தப்பியோடி சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைய முயன்றவரை வாசலில் வைத்தே வெட்டிக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்தனர்.
Comments