கை துண்டிக்கப்பட்டு, தலையில் கல்லை போட்டு இளைஞர் படுகொலை.. மது போதையில் ஏற்பட்ட தகராறுக்கு பழி தீர்க்க 5 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரை வில்லாபுரம் அருகே வயல்வெளி ஒன்றில், கை துண்டிக்கப்பட்டு, தலை நசுங்கிய நிலையில் காணப்பட்ட இளைஞரின் உடலை மீட்ட போலீசார், அதில் இருந்த செல்போனை வைத்து, கொலை செய்யப்பட்டிருப்பது மீனாட்சி பஜாரில் வேலை பார்த்துவரும் மனோஜ் என கண்டுபிடித்தனர்.
அது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்தபோது, அவர்களுக்கும், மனோஜுக்கும் பாரில் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு சமாதானம் பேசுவதாக கூறி மனோஜை வயல்வெளிக்கு அழைத்து சென்று, மது அருந்த வைத்து, பின் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையை வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments