அரசு அனுமதியின்றி சவுடு மண் எடுத்த 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்.. மண் எடுக்க பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நத்தம் ஊராட்சிப் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மீனா நள்ளிரவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நத்தம் ஊராட்சி மன்றத்தலைவி ப்ரீதிவின் கணவர் செந்தில்குமார் தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி சுமார் 20 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்குமார், டிராக்டர் ஓட்டுனர்கள் கார்த்திக், நாகராஜன் ஆகியோரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் மூவரைதேடி வருகின்றனர்.
மண் திருட்டுக்குப் பயன்படுத்திய 3 டிராக்டர்கள், ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் , 2 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments