நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கருந்தேள் கொட்டி 6-ஆம் வகுப்பு மாணவர் பலி...
திருத்தணி அருகே, கருந்தேள் கொட்டியதை பொருட்படுத்தாமல் நண்பர்களோடு விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன், மயக்கம் அடைந்து உயிரிழந்தார்.
6-ஆம் வகுப்பு படித்துவந்த ஜோதிராமன், வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கொடிய விஷம் கொண்ட கருந்தேள் ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.
கொட்டியது தேள் எனத் தெரியாமல் விளையாட்டில் மூழ்கிய சிறுவன், பின்னர் பெற்றோரிடம் ஏதோ ஒன்று தன்னை கொட்டியதாகவும், மயக்கம் வருவதாகவும் கூறியுள்ளார்.
சிறுவன் விளையாடிய இடத்தில் கருந்தேள் இருந்ததை கவனித்த பெற்றோர், சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Comments