அரிவாளை தூக்கி வலது காலை இழந்த ரவுடி கலைப்புலி ராஜா..
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த ரவுடி கலைப்புலி ராஜாவின்உயிரைக்காப்பற்றும் வகையில், அவரது வலது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கடந்த 3 ம் தேதி நவீன் குமார் என்பவரை வெட்டிக்கொன்றுவிட்டு தச்சன் குறிச்சி வனப்பகுதியில் பதுங்கியிருந்த ராஜா மற்றும் கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது கலைப்புலி ராஜா அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதால் வலது காலில் சுட்டுப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ரத்த நாளம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜாவின் வலது காலை அகற்றி திருச்சி அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
Comments