நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் - ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் 300 பேரும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்காலிக ஆசிரியர்கள் நீக்கப்பட்டதை ஊடக நேர்காணல் மூலம் சுட்டிக்காட்டியதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை திரும்பப் பெறவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments