மயிலாடுதுறையில் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஐ.எஸ். ஆதரவாளர் கைது

0 383

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரங்கக்குடியை சேர்ந்த ஹிதயத்துல்லா என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், நீடூரில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நண்பரான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஐயூப்கான் ஆகிய இருவரையும் செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

ஹிதயத்துல்லாவின் மகன் ரிஸ்வானின் விவகாரத்து பிரச்சனையில் பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலிசார், தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments