அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவேன் என்று உறுதியாக தெரிவித்திருந்த அவர், திடீரென விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக பணியாற்றுவது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும், போட்டியில் இருந்து விலகி எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
81 வயதாகும் ஜோ பைடன், ஞாபக மறதி காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக குறிப்பிட்டார். இதனால் தேர்தல் களத்தில் இருந்து அவர் விலக நெருக்கடி முற்றியது.
Comments