நீட் முறைகேடு மையங்களில் மதிப்பெண் குறைவு

0 370

நகரங்கள் மற்றும் மையங்கள் அடிப்படையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளின்படி, வினாத்தாள் கசிவு புகாருக்கு உள்ளான மையங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே எனத் தெரிய வந்துள்ளது.

முறைகேடு புகாருக்கு உள்ளான பயிற்சி மையமான ஜார்க்கண்டின் ஹசார்பாக் மையத்தில் பயின்ற மாணவர்களில் ஒருவர்கூட 700 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை என்றும் 650 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேர் மட்டுமே பெற்றதும் தெரிய வந்துள்ளது.

குஜராத்தின் கோத்ரா மையத்தில் 1,836 பேர் தேர்வெழுதிய நிலையில், ஒருவர் கூட 700 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கவில்லை. ராஜஸ்தானின் சிகார் தேர்வு மையங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments