நாங்கள் எல்லாம் ரவுடிகள் தான்... காவல் துறையை எச்சரித்த பா.ரஞ்சித்..! மெட்ராஸை எங்களை மீறி ஆட்சி செய்ய முடியாது

0 998

தி.மு.க.வில் இருக்கின்ற தலித் அமைச்சர், மேயர், எம்.எல்.ஏக்கள் எல்லோரும் கட்சிக்கு அடிமையாக இருப்பதாக விமர்சித்த இயக்குனர் பா.ரஞ்சித், இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுவிட்டு, தலித்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் உள்ள அவர்களை எல்லாம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் சென்னையில் பேரணி நடந்தது. இதில் பா.ரஞ்சித், மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று தி.மு.க. ஐ.டி. விங்கை சேர்ந்தவர்கள் சரமாரியாக விமர்சித்ததாக குற்றஞ்சாட்டினார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட வராத அமைச்சர் , மேயர், எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வின் அடிமையாக உள்ளதாக குற்றஞ்சாட்டிய ரஞ்சித், இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுவிட்டு, தலித்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் உள்ள அவர்களை எல்லாம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்

ஆம்ஸ்ட்ராங் மெட்ராஸை கட்டி ஆண்டதாகவும், அவருக்கு பிறகு யார் இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம், எங்களை மீறி மெட்ராஸை யாரும் ஆட்சி செய்ய முடியாது என்ற ரஞ்சித் , நாங்கள் எல்லாம் ரவுடிகள் என்றும் காவல்துறையை எச்சரிப்பதாகவும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments