சரி செய்யப்படும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு.. "இயல்பு நிலைக்குத் திரும்பிய விமான சேவைகள்"..!

0 489

மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறால் பாதிக்கப்பட்ட விமான சேவை சீராகி வருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

விண்டோஸ் மென்பொருள் இயங்கு தளத்தில் வெள்ளியன்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் பாதிக்கபப்ட்டன.

ஆன்லைன் செக்-இன், போர்டிங் முடங்கியதால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் கையால் போர்டிங் பாஸை எழுதித் தந்து சேவையை வழங்கின.

ஒரு சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அதிகாலை 3 மணி முதல் விமான நிறுவனங்களின் கணினிகள் இயல்பாக வேலை செய்யத் துவங்கி இருப்பதாகவும், விமான சேவைகள் சிரமின்றி நடைபெறத் தொடங்கி விட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராமமோகன் நாயுடு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments