பேருந்து நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பிய இருவர்..!
ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர், தனது நண்பருடன் காசிமேடு பகுதிக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, காரின் என்ஜின் பகுதியில் புகைவந்ததால், காரை நிறுத்தி, இருவரும் கீழே இறங்கியுள்ளனர். அப்போது, கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
Comments