தூத்துக்குடி தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிந்து பெண் ஊழியர்கள் 29 பேருக்கு மூச்சு திணறல்

0 326

தூத்துக்குடி புதூர் பாண்டியபுரத்தில் உள்ள நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிந்ததில் 29 பெண்கள் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை அறிந்து தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைத்து அமோனியா கசிவு பரவாமல் தடுத்த நிலையில், அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த தீயணைப்பு வீரரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் இந்த ஆலையில் சுமார் 500 பெண்கள் தங்கி பணியாற்றும் நிலையில், விபத்து குறித்து அறிந்ததும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி முரளி தலைமையிலான குழுவினரும் தடய அறிவியல் பிரிவினரும் ஆய்வு செய்தனர்.

நிலா சீ புட்ஸ் தொழிற்சாலையில் இன்று எந்த பணிகளும் நடக்கக்கூடாது என்றும் பணிக்கு வந்த ஊழியர்களை வெளியேற்றவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி  உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments