அமெரிக்காவில் 43 டிகிரி செல்சியஸ் வெயிலில் காரில் இருந்த குழந்தை உயிரிழப்பு

0 506

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 43 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெயிலில் 2 வயது பெண் குழந்தையை காரிலேயே விட்டுவிட்டு, வீடியோ கேம் விளையாட சென்ற தந்தையால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கிறிஸ்டோபர் என்பவர் தனது 2 வயது மகளுடன் நண்பகல் பன்னிரெண்டரை மணி அளவில் காரில்  வீட்டிற்கு சென்றுள்ளார்.

காரிலேயே தூங்கிவிட்ட குழந்தையை எழுப்ப மனமில்லாமல், ஏ.சி.-யை ஆனில் இருந்தபடியே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்ற கிறிஸ்டோபர், பிளே-ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடியதாக கூறப்படுகிறது.

சுமார் மூன்றரை மணி நேரத்துக்குப் பின், மருத்துவராக பணியாற்றும் அவரது மனைவி வீட்டிற்கு திரும்பியபோது குழந்தை காரிலேயே இறந்திருந்தது. காரின் ஏ.சி. அரை மணி நேரத்தில் தானாக ஆஃப் ஆகிவிடும் எனத் தெரிந்திருந்தும், குழந்தையை பற்றிய நினைப்பே இல்லாமல் அஜாக்கிரதையாக இருந்த கிறிஸ்டோபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments