பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தந்தை.... அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரம்

0 562

சென்னை வியாசர்பாடியில், அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்து விட்டு எதுவுமே தெரியாதது போல் நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கூலித்தொழிலாளியான ராஜ்குமாருக்கும், மனைவி விஜயலட்சுமிக்கும் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மாத இறுதியில் 3-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 7-ம் தேதி காலை விஜயலட்சுமி வீட்டில் குளித்து முடித்துவிட்டு திரும்பிய போது, பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையின் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததை கண்டு உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார்.

கிசிச்சை பலனின்றி கடந்த 9 ஆம் தேதி அக்குழந்தை உயிரிழந்தது. பிரேதபரிசோதனை அறிக்கையில், கத்திரிக்கோலால் குழந்தை குத்திக்கொள்ளப்பட்டது உறுதியானதை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments