இப்படி சாலை இருந்தால் எப்படி ஓட்டு கேட்பது ? கவுன்சிலரை கண்டித்த எம்.எல்.ஏ..! டிசம்பரில் தேர்தல் வருது தெரியுமில்ல..?

0 1473

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெட்டுவானத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, ஊருக்குள் போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையின் நிலையை பார்த்து எம்.எல்.ஏ. நந்தகுமார், அந்தபகுதி கவுன்சிலரை அழைத்து கடிந்து கொண்டார்.

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. நந்தகுமார் கவுன்சிலரை கடிந்து கொண்ட காட்சிகள் தான் இவை

ஆய்வின் போது, அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ருத் திட்டப் பணிகளுக்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை ஒப்பந்ததாரர் சரியாக சிமெண்ட் பேட்ச் ஒர்க் செய்யாததால் பள்ளமாக இருந்ததை பார்த்ததும் நந்தகுமார் கவுன்சிலரை அழைத்து சத்தம் போட்டார்.

சாலையை இப்படி போட்டு வச்சிருந்தா, எப்படி ஓட்டு கேட்பது? உடனடியாக அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலையை தரமான முறையில் அமைக்கும்படி கவுன்சிலர்களை கடிந்து கொண்டார்.

அங்குள்ள பள்ளி ஒன்றின் சமையல் கூடத்தை ஆய்வு செய்த நந்தகுமார், அதன் தரைகளை ஒழுங்குபடுத்தி கொடுக்க கேட்டுக் கொண்டார்.

பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் காலை உணவு குறித்து விசாரித்த எம்.எல்.ஏ நந்தகுமார் , தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் யார் என்று கேட்க, மாணவிகள் திகைத்து நிற்க, ஒரு மாணவி சரியாக சொன்னதால் கை கொடுத்தார்.

7-ஆம் வகுப்பு மாணவர்களிடம் படிக்கிற வயதில் செல்போனை கையில் எடுத்து ,வாட்ஸ் அப், பேஸ் புக் பயன்படுத்தினால் பாடத்தில் பெயிலாகி விடுவீர்கள் அதனை விடுத்து நன்றாக பயிக்க வேண்டும் என்று சொல்லிச்சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments