குட்கா கடத்தி வந்த லாரி ஓட்டுநரை தப்பிக்க வைத்த போக்குவரத்து காவலர்கள்... இருவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு...

0 440

பவானியில் குட்கா போதை பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக போக்குவரத்து காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பிரபு, சிவக்குமார் ஆகிய அவ்விரு காவலர்கள் கடந்த  சனிக்கிழமை வாகன தணிக்கை செய்த போது லாரி ஒன்றில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா இருந்ததை கண்டறிந்தனர்.

குட்காவை இறக்கி தனி இடம் ஒன்றில் பதுக்கி வைத்துக் கொண்ட அவர்கள், லாரியை விடுவித்தாக கூறப்படுகிறது.

வழக்கு பதியாமல் இருப்பதற்காக அவர்கள் லாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு 5 மணி நேரம் பேரம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

லாரி உரிமையாளர் புகார் செய்ததன் பேரில் காவலர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

குமாரபாளையத்தில் பதுக்கி வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுனரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments