எல் சால்வடாரில் 60 சிறுவர்கள் போலீசாரால் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

0 337

எல் சால்வடாரில் 60 சிறுவர்கள் போலீசாரால் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு அவசர நிலை பிரகடனம் செய்தபோது 3 ஆயிரத்து 319 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எல்சால்வடார் அரசு பதிலளிக்கவில்லை.

சிறைகளில் யாரும் சித்ரவதை செய்யப்படுவதில்லை என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டாலும் 4 கைக்குழந்தைகள் உள்பட 265 பேர் சிறை சித்ரவதையால் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments