காற்றாடி விட்டவர்களை விரட்டியதால் விபரீதம்.. நாய் பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் வெட்டிக் கொலை.. சிறார் குற்றவாளிகள் 2 பேர் உட்பட 7 பேர் கைது
சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே மது போதையில் இருந்த நபரை கத்தியால் குத்திக் கொன்றதாக 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கும் ஒப்பந்த ஊழியர்களான அலெக்ஸ் என்ற அந்நபர் தமது உறவினர் மோகனுடன் மார்ஷலிங் யார்டு அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அங்கு காற்றாடி விட்ட சிறுவர்களை அவ்விருவரும் விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்து சென்ற சிறுவர்கள், நண்பர்கள் சிலரை அழைத்து வந்து அலெக்ஸை பின்னந் தலையிலும் மோகனை கையிலும் வெட்டி விட்டு தப்பியதாக தெரிகிறது.
Comments