நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 15 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காலை முதலே சாரல் மழை பெய்து சாலை மிகவும் வழுவழுப்பாக இருந்ததால், ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து இரு பேருந்துகளும் கோடியூர் என்ற இடத்தில் மோதியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் பாலக்கோடு மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments