தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
சென்னையில் லேசான மழைத்தூறலுக்கு இடையிலும் இளையராஜா இசை நிகழ்ச்சியை கண்டுரசித்த ரசிகர்கள்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அருண் ஈவென்ட்ஸ் மற்றும் மெர்குரி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் உற்சாகமாக கை தட்டி வரவேற்றனர். சில பாடல்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாக எழுந்து ஆடத் தொடங்கினர்.
மழை லேசாக தூறினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இசை மழையில் நனைந்துகொண்டும், சிலர் குடையை பிடித்துக்கொண்டும் நிகழ்ச்சியை ரசித்தனர்.
Comments