ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் - போலீசார் விளக்கம்

0 514

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

கொலை தொடர்பான ஆயுதங்களை கைப்பற்ற திருவேங்கடம் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்: போலீசார்

இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டுமந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது திருவேங்கடம் தப்பியோட்டம்: போலீசார்

வெஜிடேரியன் வில்லேஜில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்: போலீசார்

உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார்: போலீசார்

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்: போலீசார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments