35 அடி கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவனை துணிச்சலுடன் காப்பாற்றிய சகோதரன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது 35 அடி கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தையை, மறுகணமே அவரது அண்ணன் ஃபர்ஹான் கிணற்றில் குதித்து காப்பாற்றினார்.
15 வயதே ஆன பர்ஹான், தனது உயிரை பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்து, குழந்தையை தோளில் சுமந்தபடி தண்ணீரில் மூழ்காமல் பார்த்துக்கொண்டதால், காப்பாற்ற முடிந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பின் தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் கூடையை இறக்கி இருவரையும் பத்திரமாக மீட்டனர்
Comments