தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
திருப்பூர் பல்லடம் அருகே பழைய துணிகள் சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம், பூமலூரில் பஞ்சுக் கழிவிலிருந்து மறு சுழற்சி மூலம் நூல் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீப்பிடித்து ஜன்னல் வழியாக அருகில் இருந்த பழைய துணிகள் சேகரித்து வைக்கும் கிடங்கிற்கும் பரவியது.
அதிகாலை சுமார் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணி கழிவுகள் மற்றும் பனியர் ரோல்கள் எரிந்து சேதமடைந்ததுடன், கிடங்கின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது.
நூல் தயாரிக்கும் ஆலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே விபத்துக்கான என கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments