நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருப்பூரில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை- 3 பேர் கைது... 800 போதை மாத்திரைகள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் வலி நிவாரணிகளை போதை மாத்திரைகளாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
மலைச்சாமியின் வீட்டில் பல்லடம் போலீசார் சோதனை நடத்தியதில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.மலைச்சாமி வீட்டில் இருந்த 800 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.
Comments