நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சேலத்தில் ஆடு- மாடுகள் உயிரிழந்ததால் சிறுத்தை நடமாட்டம் என மக்கள் பீதி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விலங்குகள் கடித்து ஆடு- மாடுகள் உயிரிழந்த நிலையில், சிறுத்தைப்புலி நடமாடுவதாக சிலர் பீதியை கிளப்பியதால், வனத்துறையினர் சிசிடிவி கேமரா மற்றும் கூண்டுகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இதனிடையே சிறுத்தை ஒன்று ஆட்டுப்பட்டியிலுள்ள ஆடுகளை தூக்கி செல்வது போன்ற சிசிடிசி காட்சிகளும், இறந்து கிடந்த மாட்டின் அருகில் சிறுத்தைப் புலி நிற்பதாக புகைப்படமும் வெளியாகி உள்ளது.
Comments