செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார்... சாராயம் காய்ச்சிய நபர் கைது

0 297

மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேரை போலீசார் பிடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவர், தானும், தனது விவசாய நிலத்தில் வேலைபார்க்கும் கூலி தொழிலாளர்களும் குடிப்பதற்காக கடுக்காய், வேலம்பட்டை, வெள்ளம் போன்றவற்றை ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியதாக கூறப்படுகிறது.

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தேவனை கைது செய்த போலீசார், அவர் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். அந்த சாராயத்தை குடித்த 3 தொழிலாளர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments