என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட்

0 1126

கடலூர் இண்டஸ் இண்ட் வங்கியில் கடன் வாங்கி பைக் வாங்கியவர்களிடம் 3 மாதமாக தவணை தொகையை ஜி பேயில் வசூலித்துக் கொண்டு வங்கியின் கலெக்சன் ஊழியர் கம்பி நீட்டிய நிலையில், கடனை முறையாக செலுத்தவில்லை என்று அபராதவட்டி விதித்ததால் வங்கியை கடன் வாங்கியவர்கள் இழுத்து பூட்டினர்

கடலூர் இம்பிரியல் சாலையில் அமைந்துள்ள INDUSIND வங்கிக்கு வாடிக்கையாளர் உறவினர்களுடன் பூட்டு போட்ட காட்சிகள் தான் இவை..!

கடலூர் வண்டி பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவர் இந்த வங்கியில் இரண்டு சக்கர வாகனத்திற்கான கடன் வாங்கினார். கடந்த மூன்று மாதங்களாக அவர் வண்டிக்கான தவணையை செலுத்த வங்கியில் சர்வர் பிரச்சனை எனக்கூறி கலெக்ஷன் ஏஜென்ட் மணிவண்ணன் ஜி பேயில் பெற்றுள்ளார். பணம் கட்டியதற்கான ரசீது கேட்டபோதும் சர்வர் பிராப்ளம் காரணமாக ரசீது வரவில்லை என கலெக்ஷன் ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நந்தகுமார் 3 மாத தவணை தொகையை கட்டவில்லை எனக் கூறி வங்கி அவருக்கு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். நந்தகுமார் கடந்த ஒரு வாரமாக தான் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கிக்கு அலைந்த போது அங்கு பொறுப்பில் உள்ளவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். ஏஜெண்டிடம் செலுத்திய பணத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, 3 மாத தவணையை அபராதத்துடன் செலுத்த கூறிய அதிகாரிகள், வங்கியின் அதிகார பூர்வ கலெக் ஷன் ஏஜெண்டான மணிவண்னன் ஏமாற்றி பெற்றுச்சென்ற பணத்துக்கு தாங்கள் பொறுப்பு ஏற்கமுடியாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகின்றது.

தங்கள் பணத்துக்கு உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் தனது உறவினர்களுடன் வங்கிக்கு வந்து அதிகாரிகளிடம் கேட்ட போது சென்னைக்கு சென்று தலைமை அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து அலைந்து திரிந்து வெறுத்துப்போன வாடிக்கையாளர் நந்தகுமார், வங்கியின் ஷட்டரை இழுத்து பூட்டி வாங்கிக்குள் ஊழியர்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு போலீசார் வந்து நந்தகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வங்கியை திறந்து உள்ளே இருந்த ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

இரு தரப்பினரையும் அழைத்து பேசிய எஸ்.ஐ, உங்கள் வங்கியின் கலெக்சன் ஏஜன்ட் மணிவண்ணனிடம் தான் பணம் கட்டியுள்ளார் , அதற்கு பொறுப்பு நீங்கள் தான் அதற்கு சரியான பதில் அளித்து அவருக்கு சரியான முறையில் பணத்தை பெற்று தர ஏற்பாடு செய்யுங்கள் என கூறியதோடு இது குறித்து நந்தகுமாரை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறு அனுப்பினார்

வங்கி அதிகாரிகளும் அங்கு நின்ற சட்ட நிபுனரும், தாங்கள் ஏற்கனவே காவல் ஆய்வாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாக தெரிவித்ததால் உக்கிரமாக இருந்த எஸ்.ஐ, சாந்தமானார்

தங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இழுத்தடித்ததால், ஊழியர்களை வங்கிக்குள் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments