கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மனைவி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற நிலையில் 14 மற்றும் 11 வயது குழந்தைகள் 2 பேரை கொன்று விட்டு கொத்தனார் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்று மனைவி உமா சம்பாதித்து அனுப்பிய பணத்தை ரமேஷ் என்ற அந்த கொத்தனார் குடித்து செலவழித்து விட்டதாக தெரிவித்த போலீசார், அதனால் ஏற்பட்ட குடும்ப கஷ்டத்தை போக்க கடன் வாங்கி உமா மீண்டும் ஒன்றரை மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறினர்.
கொத்தனார் இறந்ததற்கு கடன் தொல்லை காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments