யூரோ கால்பந்து - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்... 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது ஸ்பெயின்

0 397

யூரோ கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸை 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. பலம் பொருந்திய பிரான்ஸ் அணிக்கு எதிராக ஆரம்பம் முதலே தாக்குதல் பாணி ஆட்டத்தை ஸ்பெயின் வீரர்கள் வெளிப்படுத்தினர்.

இருந்தபோதும் ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முதல் கோலை அடித்தது. அதற்கு பதிலடி தரும் விதமாக 16 வயதே ஆன ஸ்பெயின் வீரர் லமேன் யமால் 21-வது நிமிடத்தில் அட்டகாசமான கோல் ஒன்றை அடித்தார்.

அடுத்த 4-வது நிமிடத்திலேயே, ஸ்பெயின் வீரர் டானி ஓல்மோ மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்டம் ஸ்பெயின் வசம் சென்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments