சென்னையில் நள்ளிரவில் ஏரிக்குள் பாய்ந்த கார் - பீகாரைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
சென்னை சிறுசேரி அருகே நள்ளிரவில், மென்பொருள் நிறுவன ஊழியர்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு விட்டுத் திரும்பிய கார் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் வந்தபோது பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் ராஜசேகர் படுகாயமடைந்த நிலையில், அவருடன் பாதுகாப்புக்காகச் சென்ற பீகாரைச் சேர்ந்த கௌஷல் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிரேன் உதவி கொண்டு கார் மீட்கப்பட்ட நிலையில், தூக்கக்கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments