மயிலாடுதுறையில் மனைவியுடன் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றவருக்கு தீவிர சிகிச்சை... நண்பர் உயிரிழப்பு

0 351

மயிலாடுதுறையில் தற்கொலைக்கு முயன்ற நண்பரின் விஷம் கலந்த மதுபானத்தை எடுத்துக் குடித்தவர் உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜோதிபாசு என்பவரின் மனைவி சசிகலா கோவையில் பணிபுரிந்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் ஊருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.மன உளைச்சலில் இருந்த ஜோதிபாசு மதுபானம் வாங்கி அதில் பூச்சி மருந்தைக் கலந்துள்ளார்.

அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு தனக்கு மதுபானம் தரும்படி கேட்டுள்ளார் மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்த நிலையில் ஏற்கனவே மது அருந்தி  போதையில் இருந்த ஜெரால்டு நண்பரின் பேச்சைக் கேட்காமல் குடித்துள்ளார். அப்பகுதி மக்கள் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். 

சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments