திருப்பூரில் காதலர்கள் திருமணம் செய்து காவல்நிலையத்தில் தஞ்சம்... இருதரப்பு உறவினர்களை சமாதானப்படுத்திய போலீசார்

0 577

திருப்பூர் மாவட்டம் காடையூர் அடுத்த பெரியஇல்லியம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், ஈரோட்டை சேர்ந்த அருண் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்காவின் பெற்றோர்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா, தனது காதலன் அருணிடம் தஞ்சமடைந்துள்ளார்.

திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடிகள், பாதுகாப்பு வழங்கக்கோரி வடக்கு காவல்நிலையத்திற்கு வந்தனர். தகவலறிந்த இருதரப்பு பெற்றோர்களும் தங்களது உறவினர்களுடன் காவல்நிலையத்திற்கு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமானப்படுத்திய போலீசார், பிரியங்காவை காதல் கணவர் அருணுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments