கார்களை திருடி பதிவு எண் பலகை, ஜி.பி.எஸ். கருவியை மாற்றி விற்பனை செய்த கும்பல் கைது..! 

0 358

கேரளாவின் திருச்சூரில் இருந்து கோவை வந்த ஒரே குடும்பத்துக்கு சொந்தமான 3 கார்களைத் திருடி, அவற்றின் பதிவு எண் பலகை மற்றும் ஜி.பி.எஸ். கருவியை கழற்றி விட்டு, புதிததாக மாற்றி வேறு பெயின்ட் அடித்து விற்றதாக 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மாற்றப்பட்ட ஜி.பி.எஸ். கருவியை வைத்து கார் எங்கே உள்ளது என்பதை டிராக்கிங் செய்து, அது பற்றிய தகவலை காரின் அசல் உரிமையாளரிடம் தெரிவித்து, அந்த கும்பல் இரட்டை சம்பாத்தியம் பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதே பாணியில் கேரள கார்களை குறி வைத்து அந்த கும்பல் திருடி வந்ததாகவும், இது தொடர்பாக கேரளாவில் உள்ள திருட்டுக்கு உடந்தையான கும்பல் உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments