தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
வெள்ளக்காடாக காணப்படும் வங்கதேசத்தின் வட மாகாணங்கள்... 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி
பிரம்மபுத்திரா நதியில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் வங்கதேசத்தின் வட மாகாணங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சுமார் 20 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வட மாகாணங்களில் பல பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களால் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த வார இறுதிக்குள், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளதால் அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர்.
Comments