திருச்சி அருகே நெப்போலியன் என்ற இளைஞர் நேற்று கொலை செய்யப்பட்டார்...

0 316

 திருச்சி அருகே நண்பரின் காதல் விவாகரத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவளர்ச்சோலையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நாகேந்திரனை காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது நண்பர் ஜீவா அப்பெண்ணை அணுகி வலியுறுத்தியதாகவும், இதை செல்ஃபோனில் பதிவு செய்து தமது அண்ணன் விக்னேஷிடம் அப்பெண் காட்டியதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக நாகேந்திரனை விக்னேஷ் தட்டிக் கேட்டதாகவும், உடனே தமது நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று நாகேந்திரன் விக்னேஷை பதிலுக்கு மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொண்டதாகவும், அதில் நாகேந்திரனின் நண்பர் நெப்போலியன் உயிரிழந்ததாகவும் போலீசார் கூறினர்.

நெப்போலியனின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments