தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
கேரளாவில் பரவி வரும் அரிய வகை மூளை நோய் தொற்று எதிரொலி...
கேரளாவில் பரவி வரும் அரிய வகை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் மூளை தொற்று நோய் எதிரொலியாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரிய வகை மூளை தொற்றால் தலைவலி, காய்ச்சல், வாந்தி, கடினமான கழுத்துவலி, பிரமை, வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதால் கலங்கலான, மாசு உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலைகளையும், பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள நீச்சல் குளங்களை பொது சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுத்திகரிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Comments