ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய அம்பானி குடும்பம்

0 537

ஜூலை 12-ஆம் தேதி நடக்கவுள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்காக மும்பை பாந்த்ரா-குர்லா பகுதியில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டர் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

முன்னதாக, திருமணத்துக்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் சல்மான் கான், ரன்பீர் கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், திஷா பதானி, மௌனி ராய், வித்யா பாலன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், எம்.எஸ். டோனி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

சங்கீத்தின் போது, ஷாரூக்கானின் தீவானுகி பாடலுக்கு முகேஷ் அம்பானி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நடனமாடினர். விலை உயர்ந்த ஆடைகளுடன் மணமக்களும் நடனமாடினர்.

அம்பானி இல்லத் திருமணவிழாவிற்கு உலக அளவில் வி.ஐ.பி.க்கள் மும்பைக்கு வரவுள்ளதால், ஜூலை 12 முதல் 15 வரை ஜியோ கன்வென்ஷன் சென்டர் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மும்பை போலீசார் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments