எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு விசாரணையை செல்போனில் வீடியோவாக அனுப்பியதாக ஒருவர் கைது
கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன்மனு மீதான விவாதத்தை வீடியோ கால் மூலம் அவரது உறவினருக்கு காட்டிய இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்ற எழுத்தாளர் அளித்த புகாரின் பேரில்,பொதுப் பணி செய்வதில் அரசு ஊழியரை தடுப்பது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டப்பிரிவின்படி தமிழினியன் என்பவரை போலீசார் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Comments