ஊட்டியில், குதிரை பந்தயத்திற்கு பிரசித்தி பெற்ற மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தியது

0 406

உதகையில் குதிரை பந்தயத்திற்கு பிரசித்தி பெற்ற மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய 822 கோடி ரூபாய் குத்தகை பாக்கியை தராததால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 52.34 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

உதகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து இங்கு குதிரை பந்தையம் நடத்தி வந்த நிலையில் குத்தகை பணம் செலுத்தாததால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த நிலையில், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments