ரூ. 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பேரூராட்சி அலுவலக தற்காலிக பணியாளர் கையும் களவுமாக சிக்கினார்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அனீஸ்நகரில், கட்டிடம் கட்ட அனுமதி வழங்கவும், சொத்துவரி ரசீது தருவதற்காகவும், கட்டிடப் பொறுப்பாளர் நைனா முகம்மது என்பவரிடம் இருந்து தொண்டி பேரூராட்சி அலுவலக தற்காலிக பணியாளர் தொண்டிராஜ் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலிசார் கையும் களவுமாக பிடித்தனர்.
தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், அலுவலக கிளார்க் ரவிச்சந்திரன் உள்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
Comments