நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
வங்கி லாக்கரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம்... ஓராண்டுக்குப் பின் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிந்து விசாரணை
சென்னை அண்ணாசாலை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரிலிருந்து ஓராண்டுக்கு முன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமானதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதுவு செய்து விசாரணை துவங்கினர்.
வண்டலூரைச் சேர்ந்த கரிமில சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு சொந்தமான அந்த நகைகள் மாயமானது பற்றி ஓராண்டு முன் சிந்தாதரிப்பேட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சுப்பிரமணியன் பயன்படுத்தி வரும் லாக்கரை, அவருக்கு முன் பயன்படுத்திய நபர் போலிச் சாவி தயாரித்து திருடினாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
Comments