தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
வேலூர் மாவட்டம் அரியூரில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த 5 பேர் கும்பலை ஒரு மணி நேரத்துக்குள் கைது செய்த போலீசார்
வேலூர் மாவட்டம் அரியூரில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த 5 பேர் கும்பலை ஒரு மணி நேரத்துக்குள் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு பைக்கில் சென்ற எம்.எல்.ஏ.ராஜா என்ற ரவுடி மீது காரால் மோதிய கும்பல், பொதுமக்கள் கண்முன்னே அவரை சரமாரியாக வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.
முகத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட முறை வெட்டியதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் தப்பி சென்றவர்களை வல்லம் சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களில் தேஜாஸ் என்பவரின் அண்ணனை, ராஜா 3 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்ததாகவும், அதற்கு பழி தீர்க்கவே அந்த கும்பல் அவரை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments