இன்ஸ்டாவில் லைவ் போட்ட புரபஷனல் ரவுடியை பிடித்து மாவுக்கட்டு போட்ட போலீஸ்..! ஏய்... வாய் தான் உனக்கு பிரச்சனை..

0 865

சென்னை திருவொற்றியூர் போலீசுக்கு சவால் விட்டு இன்ஸ்டாகிராமில் லைவ் போட்ட புரபஷனல் ரவுடியை மடக்கிப்பிடித்த போலீசார் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறி அவருக்கு மாவுக்கட்டும் போட்டு விட்டனர்

இன்ஸ்டாகிராமில் மிஸ்டர் புரபஷனல் ரவுடி என்ற அடையாளத்துடன் போலீசை ஆபாசமாக பேசியதால் வாங்கிக் கட்டிக் கொண்ட கஞ்சா குடிக்கி ரவுடி ரிஷி கண்ணா இவர் தான்..!

திருவொற்றியூர் NTO குப்பத்தை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஆகாஷ் என்பவரின் வீட்டிற்கு
கடந்த மே மாதம் 28 தேதி காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி தேசப்பன், தருண் ஆகிய
இருவரும் சென்றதாகவும், காசிமேட்டை சேர்ந்த ரவுடி ரிஷி கண்ணா 50,000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி வரும்படி கூறியதாக கத்தியை காட்டி மிரட்டி மணிபர்ஸ் செல்போன் ATM கார்டுகளை பறித்து கொண்டு தப்பியதாக கூறப்படுகின்றது.

இது குறித்த புகாரின் பேரில் ரவுடி தேசப்பன், தருன் ஆகிய இருவரை கைதுசெய்த போலீசார் 15 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரஷி கண்ணாவை இரண்டு மாதங்களாக தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த ரிஷி கண்ணா மிஸ்ட்டர் ப்ரொபஷனல் ரௌடி என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் திருவொற்றியூர் போலீசார் தான் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்க முடியாமல் தலைமுடியை எல்லாம் பிச்சிக்குவீங்க என்றும், கொலை ஒன்று செய்யப்போவதாகவும் முடிந்தால் தடுத்து பார்க்க சொல்லியும் ஆபாசமாக சவால் விட்டான்

செல்போனை வைத்து போலீஸ் தேடினால் செல்போனை தூக்கி போட்டுட்டு சிம்கார்டை கடிச்சி துப்பிட்டு போயிடுவேன், போலீசாரால் தன்னை பிடிக்க முடியாது ஏன்னா நீங்க போலீஸ், நா அக்யூஸ்ட் என்று எகத்தாளமாக பேசினான்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து எழும்பூர் ரயில் நிலையம் மூலம் தப்பிச்செல்ல முயன்ற ரவுடி ரிஷிகண்ணாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட ரிஷிகண்ணாவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று போலீசார் பொறுப்பாக மாவுக்கட்டு போட்டு விட்டனர்

தன்னைத்தானே சர்வதேச ரவுடி போல நினைத்துக் கொண்டு சவால் விட்ட ரிஷிகண்ணா சிறகொடிந்த பறவையாக மாவுக்கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments