நீலகிரியில் கன மழையால் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்கள்.. ஒரு சில வீடுகளில் விரசல்களும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6 நாட்களாக பெய்த கன மழையால் நெலாக்கோட்டையில் ஒரு சில வீடுகளின் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஒரு சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்தால் வீடுகள் இடிந்து விழக்கூடும் என்றும் அவர்கள் கூறினர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments