அப்பாடா ஒரு வழியாக.. வெளியே வந்தார் கோவன் டாஸ்மாக்க மூட புதுசா பாட்டு..! பார்ட்டி நெட்டிசன்கள் தேடியவர் வந்தார்..!
கடந்த ஆட்சியில் உணர்ச்சி பொங்க.. நரம்பு புடைக்க.. டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாட்டு பாடியவர் தமிழ்நாடு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் கோவன்..!
கடந்த 3 வருடங்களாக அவர் டாஸ்மாக்கை மூடச்சொல்லி பிரச்சாரம் எதையும் மேற்கொள்ள வில்லை என்றும் கள்ளாச்சாராயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டிலும், அண்மையில் கள்ளக்குறிச்சியிலும் பலர் பலியான நிலையிலும் அவர் வாய் திறக்க மறுப்பது ஏன் ? என்றும் பல கட்சி நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் கோவனை கடுமையாக விமர்சித்தனர்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஜனநாயக சக்திகள் என்ற கூட்டமைப்பு சார்பாக கள்ளக்குறிச்சி விஷ கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை முன்னிறுத்தி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாடகர் கோவன் பங்கேற்றார்.
தன் மீதான விமர்சனத்துக்கு பதில் அளித்த அவர், டாஸ்மாக்கை விமர்சித்து புதிய பாடல் ஒன்றை பொது வெளியில் பாடினார்
அவருடன் சேர்ந்து அவரது இயக்க தோழர்களும் இந்த பாடலை ஆர்ப்பாட்டத்தில் பாடினர்
Comments