குடும்ப விவகாரத்தில் பஞ்சாயத்து விசிக பிரமுகர் உயிரோடு எரிப்பு பெட்ரோல் ஊற்றி தீவைத்த உறவினர்..!

0 739

உளுந்தூர் பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தில் நடத்தை சரியில்லை என்று மனைவியை பிரிந்து வாழ்ந்த உறவுக்கார இளைஞரை அழைத்து சேர்ந்து வாழுமாறு பஞ்சாயத்து பேசிய வி.சி.க பிரமுகரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உறவுக்காரரால் உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டதால், உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடும் விசிக பிரமுகர் சூசை நாதன் இவர் தான்..!

உளுந்தூர்பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசை நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் மாவட்ட அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே குடும்பத்தினருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த உறவுக்காரரான சின்னத்தம்பி என்பவர் இவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.

உடல் முழுவதும் தீ பற்றிக் கொண்டதால் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடிய சூசை நாதனை உறவினர்கள் போர்வை மற்றும் வாலை இலைகளை போர்த்தி தீயை அணைத்தனர். அதற்குள்ளாக அவர் உடலில் பல இடங்கள் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பியை பிடித்து போலீசார் விசாரித்தனர். நடத்தை சரியில்லை எனக்கூறி சின்னத்தம்பி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்த விவாகரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு இருவரையும் அழைத்து சூசை நாதன் பஞ்சாயத்து பேசியதாகவும் கூறப்படுகின்றது. மனைவிக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி சேர்ந்து வாழ மறுத்த சின்னத்தம்பியை, சூசை நாதன் தாக்கியதாக கூறப்படுகின்றது.

அன்று முதல் சூசை நாதன் மீது சின்னத்தம்பி ஆத்திரத்தில் சுற்றியுள்ளான். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு சூசை நாதனை தேடி வீட்டுக்கு சென்றவனை, வீட்டில் இருந்தவர்கள் காலையில் வா என்று விரட்டி உள்ளனர். செல்வது போல அங்கிருந்து நகர்ந்தவன் இருட்டுக்குள் மறைந்திருந்ததாக கூறப்படுகின்றது . வீட்டின் வெளியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது அதிகாலை 2:45 மணியளவில் தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை சூசை நாதன் மீது ஊற்றி லைட்டரால் தீவைத்ததாக சின்னத்தம்பி வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்கள் கண்ணீர் மல்க விவரித்தனர்

குடும்ப விவகாரத்தில் பஞ்சாயத்து பேசியதால், உறவினரால் விசிக பிரமுகர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments