இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்.. கடலில் இறங்கி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!

0 203
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்.. கடலில் இறங்கி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுடன், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் சாலை பாலத்திலும் ஒரு குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments