ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிரூபித்த நாட்டு மக்கள்: பிரதமர்

0 468

ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்ற பின் முதன்முதலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.

பாரிசில் விரைவில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடுவர்கள் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் சியர் ஃபார் பாரத் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீரர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

ஆந்திராவில் சுமார் ஒன்றரை லட்சம் பழங்குடியின குடும்பங்கள் சுவை மற்றும் மணம் நிறைந்த அரக்கு காபி சாகுபடியில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட பிரதமர், கேரளாவில் கார்தும்பி குடைகளை அதிகளவில் தயாரிக்கும் பழங்குடியின பெண்கள் அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்வதாக கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments